Sunday, December 31, 2006

04-புத்தாண்டை வரவேற்போம்

புத்தாண்டு என்றாலே கண்டிப்பாக "பார்ட்டி" இருக்கும். "பார்ட்டி' என்றால் பாட்டு, நடனம், வேடிக்கை என்று கொண்டாட்டமாக இருக்கும்.வந்த உங்களை மகிழ்விக்க இதோ ஒரு மேடைக் காட்சி.கண்டு களித்து உற்சாகமாக மகிழ்ச்சியோடு புது ஆண்டு 2007ல் அடி எடுத்து வைப்போம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


stage art

Saturday, December 30, 2006

03-சிரித்து... சிரித்து....

சிரிப்பில் எத்தனையோ வகை உண்டு. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் ஒரு திரைப்படத்தின் பாடலில் பலவகையான சிரிப்புக்களையும் சிரித்துக்காட்டி நம்மையும் சிரிக்கவைத்து இருப்பார்.ஆனால் குழந்தையின் சிரிப்பைக் கேட்டுப் பாருங்கள், அதில் ஏற்படும் ஆனந்தமே அலாதிதான்.
இங்கே ஒரு வயதைத் தொடும் குழந்தையின், பொங்கும் மழலைச் சிரிப்பை கேட்டு மகிழுங்கள்


"மழலையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்."
"சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்"






If player is not workingCLICK HERE


Friday, December 29, 2006

02-சுனாமி?

சென்ற குறும் படத்துல சின்னப் பையன் தானா தண்ணியில விழுந்தான். ஆனா இந்தப் பையன பாருங்க, எதிர்பாராத தாக்குதல்னால நிலை குலைந்துப் போறத. சுனாமி தாக்குதல் எப்படின்னு புரிஞ்சுக்க முடியுது.

படம் முழுவதும் டவுன்லோடு ஆகிய பின் பார்த்தால்தான் ரசிக்க முடியும்





thanks:grindayzar

01-புத்திசாலிப் பூனை-1

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதினை ஒருசில வினாடிகளில் சொல்லும் படம்.புத்திசாலித்தனம் இருந்தா எதிராளி விரிக்கும் வலையில் விழாமல் தப்பிப்பதுடன் எதிராளியையே அவர் விரிச்ச வலியில விழ வைக்கலாம் என் சொல்லும் படம்




இந்த குறும்படம் "எண்ணச்சுவடி"யில் முன்னரே இடம் பெற்றிருந்தாலும் ஒளிப்பெட்டகத்திலும் சேமித்து விடலாமே என்று மீண்டும் ஒரு முறை இங்கே.

Wednesday, December 27, 2006

00-வலைக்காட்சி



அனைவருக்கும் வணக்கமுங்க!

அது என்ன "வலைக்காட்சி"ன்னு முதல்ல பெயர் காரணத்த சொல்லிட்றேனுங்க.

பெரிய திரையில பக்கத்துல (projector) இருந்து படம் காட்டினா அது திரையரங்கம்ங்க (Theater)

சின்னத்திரையில தூரத்துல இருந்து (tele) படம் போட்டா அது தொலைக்காட்சிங்க (Television)

அதிவிட சின்னத்திரையில வெகுதூரத்துல இருந்து வலை (net)மூலமா படம் காட்டப் போறேங்க எனவே இது வலைகாட்சிங்க.(Netvision)

ஆக, நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது:
"மதி(நிலா?)வலைக்காட்சி" யின் "ஒளிமாலை"

இதுல வெறும் vedio மட்டும் பதிவு செய்யலாம்னு இருக்கேன்.

இதுல எல்லாம் நூறு சதவிகிதம் Sponsered Programme மட்டும்தாங்க.

(அதான், எல்லாம் வலையில சுட்டதுன்னு அர்த்தம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.)

எனவே யாரும் copyrightன்னு சண்டப் போட வந்திடாதிங்க.

சிம்பிலா சொல்லனுமுன்னா இது நம்பலோட ரசித்த, பிடித்த,பார்த்த Vedio Collection(ஆல்பம்) அவ்வளவுதாங்க.
கூடவே தமிழ் மணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனது வர்ணணையும்.