
அனைவருக்கும் வணக்கமுங்க!
அது என்ன "வலைக்காட்சி"ன்னு முதல்ல பெயர் காரணத்த சொல்லிட்றேனுங்க.
பெரிய திரையில பக்கத்துல (projector) இருந்து படம் காட்டினா அது திரையரங்கம்ங்க (Theater)
சின்னத்திரையில தூரத்துல இருந்து (tele) படம் போட்டா அது தொலைக்காட்சிங்க (Television)
அதிவிட சின்னத்திரையில வெகுதூரத்துல இருந்து வலை (net)மூலமா படம் காட்டப் போறேங்க எனவே இது வலைகாட்சிங்க.(Netvision)
ஆக, நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது:
"மதி(நிலா?)வலைக்காட்சி" யின் "ஒளிமாலை"
இதுல வெறும் vedio மட்டும் பதிவு செய்யலாம்னு இருக்கேன்.
இதுல எல்லாம் நூறு சதவிகிதம் Sponsered Programme மட்டும்தாங்க.
(அதான், எல்லாம் வலையில சுட்டதுன்னு அர்த்தம் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.)
எனவே யாரும் copyrightன்னு சண்டப் போட வந்திடாதிங்க.
சிம்பிலா சொல்லனுமுன்னா இது நம்பலோட ரசித்த, பிடித்த,பார்த்த Vedio Collection(ஆல்பம்) அவ்வளவுதாங்க.
கூடவே தமிழ் மணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனது வர்ணணையும்.