Sunday, May 27, 2007

14. மேஜிக் - (1)

Photoவில் மேஜிக் செய்து அசத்தியவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் Photo Frame ல் மேஜிக் செய்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இது எப்படி என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.


Sunday, February 11, 2007

13-முயலும் பாம்பும்

சிறுவயதில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.நடுவில் ஒரு பாம்பை பெட்டியில் வைத்துக் கொண்டு கூட்டத்தை கூட்டி வேடிக்கை காட்டிக் கொண்டிருப்பவன், கடைசி நிகழ்ச்சியாக பாம்புக்கும் கீரிக்கும் சண்டைப் போட விடுவதாகக் கூறி கலெக்ஷன் ஆனதும் மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப் பட்டு விடுவான். அப்படி ஏமாந்தவர்கள்களுக்காக இங்கே முயல் பாம்பு சண்டை காட்சி. பார்த்து ஆறுதல் அடைந்துக் கொள்ளவும்.

Tuesday, January 30, 2007

12.வழுக்கி விழுந்தவர்கள்

வாழ்க்கையில் அல்ல, விளையாட்டில் வழுக்கி விழுந்தவர்களை படம் பிடித்து இருக்கிறார்கள்.மற்றவர்கள் விழுவதைக் கண்டு சிரிப்பது மனிதாபிமானம் இல்லை என்று கூறுபவர்கள் கூட இதனைக் கண்டால் ரசித்து சிரிப்பார்கள்.

Tuesday, January 9, 2007

11-தொடரும் லீலைகள்

தலைப்பைபார்த்துட்டு என்னமோ, ஏதோன்னு நீங்களா கற்பனை பண்ணிக்காதிங்க. நம்ம பூனயாரின் லீலைகளை பற்றிதான் சொல்ல வந்தேன்.விளையாட்டு, வேடிக்கை, கோபம்,கொஞ்சல், மிரட்டல்ன்னு எல்லா Fieldலயும் பூந்து கலக்குது பாருங்க.நம்ப பூனையாருக்கு என்ன பட்டம் கொடுத்தா சரியா இருக்கும்?

Player ல் சரியாக தெரியவில்லை என்றாலோ, Vedioவை பெரியதாக காண வேண்டும் என்றாலோ, கீழே உள்ள தொடர்பை சொடுக்கவும்


If player is not workingCLICK HERE


Saturday, January 6, 2007

10-பூனையின் திருவிளையாடல்

பூனையின் திருவிளயாடல் ஆரம்பம். திருவிளையாடல் படத்தின் தலைப்பை தனுஷ் படத்துக்கு வைத்ததுக்கு கேஸ் போட்டது போல யாரும் கேஸ் போட மாட்டார்கள் என்ற தைரியத்தில் வைத்ததலைப்பு. இது போல பூனைகளின் அட்டகாச வீடியோக்கள் அதிகம் நெட்டில் உலவுகின்றது. அவைகளில் சில இங்கேfunny cats

Friday, January 5, 2007

09-"செல்" ஆயுதம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். இங்கே 'செல்'லும் கூட பூட்டிய வீட்டை திறக்க ஆயுதமாக உபயோகப் படும் என்று காட்டி இருக்கிறார்கள்.மொழி புரியாவிட்டலும் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.

Thursday, January 4, 2007

08-சில நேரங்களில் சில பிராணிகள்

சில நேரங்களின் சிலர் செய்யும் செயல்கள் சிரிப்பை வரவழைக்கும். மனிதர்கள் என்று இல்லை சில நேரங்களில் நமது செல்லப் பிராணிகளோ, மிருகங்களோ செய்யும் சேஷ்ட்டைகள் கூட அவ்வாறு தமாஷாக அமைந்துவிடுவது உண்டு. பல்வேறு பிராணிகளின் சில்மிஷங்களை இங்கே பார்த்து ரசிங்கள். வீடியோ Play ஆகவில்லை என்றால் Vedio Frame க்கு கீழே உள்ள தலைப்பில் கிளிக் செய்யவும்.


Ha-Ha-Ha
video powered by Metacafe

Wednesday, January 3, 2007

07-பூனை பேசுமா?

சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை என்று கேள்வி பட்டிருக்கிறோம். செல்லப் பிராணிகள் அனைத்தையும் பயிற்சிக் கொடுத்தால் பேச வைக்கலாம் என்று காட்ட பூனையை பேச வைத்து இருக்கிறார்கள்.வீடியோ Play ஆகவில்லை என்றால் Vedio Frameக்கு கீழே உள்ள தலைப்பில் கிளிக் செய்யவும்.


Talking Cats
video powered by Metacafe

Tuesday, January 2, 2007

06-படத்தை படம் பிடிக்க

வீடியோ தொகுப்புலயும் ஒரு தொழில்நுட்பப் பதிவு. விண்டோ மீடியா பிளேயர்ல வீடியோ பார்க்கும் போது ஏதாவது நல்ல சீன் வந்தா Print Screen key உபயோகித்து காப்பி செய்து கருப்பு imageயை பார்த்து ஏமாந்தவங்கள்ல நானும் ஒருத்தன். அது எப்படி சரி செய்யலாம்னு சொல்லித்தர்ராங்க உபயோகமா இருந்தா பயன் படுத்திக்கங்க.


CAPTURE SCREENSHOTS IN WINDOWS MEDIA PLAYER
video powered by Metacafe

Monday, January 1, 2007

05-புதுவித 'கோட்'

கோடை காலத்துல கூட, 'கோட்' போட்டுகிட்டு அலுவலகத்துக்குப் போக வேண்டிய கட்டாயம் நம்மூர்ல பல பேருக்கு உண்டு. ஆனா மேலைநாடுகள்ல குளிர் அதிகமா இருக்கிறதனால எல்லாருமே கோட் போட்டுக்கிறாங்க. அதுவும் குளிர் காலத்துல கேக்கவே வேண்டாம். கம்பளியினாலயும், 'உள்ளன்'னாலயும் ஆன கோட்ட போட்டுகிட்டுப் போறத பார்த்திருக்கலாம். ஆனா இங்க ஒருத்தர் போட்டுகிட்டுப் போற மாதிரி "லைவ் உள்ளன்" கோட் போட்டு யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த "லைவ் உள்ளன்" எவ்வளவு சமத்துப் பாருங்க.